சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது.
அமெரிக்கா நியூயார்க் பகுதியை சேர்ந்த டியாகோ அயலா (35)என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ காட்சி பதிவு செய்துள்ளார்’ இதுகுறித்து அந்த சிறுமி கூறியதை தொடர்ந்து அயலா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்ததோடு இனி எந்தவித ஜாமீனும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில் ஒரு சிறுமி கூட பார்க்காமல் இவர் செய்த செயல் மிகவும் கொடூரமானது என்றும் அந்த சிறுமியின் துணிச்சலை பாராட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தண்டனை மற்ற குற்றவாளிகளுக்கு அச்சத்தை உருவாக்கும் எனவும் இந்த தண்டனையால் சிறுமியின் மனது ஆறுதலுக்குள்ளாகும் எனவும் கூறியுள்ளார்.