Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பாலியல் தொல்லை” காட்டுப்பகுதிக்குப் போகலாம்…. அழைத்துச் சென்ற பெண்கள்…. கொடுத்த தண்டனை…!!

பாலியல் தொல்லை கொடுத்தபனியன் நிறுவன அதிகாரியைபெண்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி சூளை பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். 42 வயதாகும் இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையில் ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். அதே நிறுவனத்தில் மதுரையை சேர்ந்த 24 வயது மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இரண்டு பெண்களும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றார்கள்.

இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு சிவகுமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரியவந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அந்த 2 பெண்களும் திட்டமிட்டு கடந்த 14ம் தேதி சிவக்குமாரை பல்லடம் அருகே உள்ள அருள் புறத்தில் பாச்சான் காட்டுப்பாளையம் கொட்டை காட்டுப்பகுதியில் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்தனர் சென்றனர்.

அங்கு இருவரும் சேர்ந்து சிவகுமாரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி அவரை தர்ம அடி கொடுத்தனர். இந்த தகவல் அறிந்த பல்லடம் காவல் துறையினர் மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றது. இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து மேலாளர் சிவக்குமாரை கைது செய்தனர் .அதைத்தொடர்ந்து சிவகுமார் கொடுத்த புகாரில் இரண்டு பெண்களின் மீது வழக்குப் பதிந்து அவர்களையும் கைது செய்தனர். ஆனால் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

Categories

Tech |