Categories
தேசிய செய்திகள்

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை…”பேச்சுவார்த்தைக்கு அழைத்து செய்த காரியம்”… கொடூரத்தின் உச்சம்..!!

ராஜஸ்தானில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்துச் சென்று நிர்வாணமாக்கி அவரையும் அவரது தாயும் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம்  பச்சீவர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதை அறிந்த அந்த இளைஞனின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வர சொல்லி உள்ளனர். இதை நம்பிய சம்பவ இடத்திற்கு சென்ற தாய் மற்றும் சிறுமியை 3 பெண்கள் உட்பட 5 பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை நிர்வாணமாக்கி அடித்து உதைத்துள்ளனர்.

இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டது. இதை அடுத்து காவல்துறை இது சம்பந்தமாக 3 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நடத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் திருமணமானவர் என்பதும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பலமுறை பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்ததும் தெரியவந்தது. ஜாதி ரீதியாக தாக்குதல் நடத்தி உள்ளது தெரியவந்தது.  ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, இந்த செயலை கடுமையாக கண்டித்ததோடு இந்த சம்பவங்கள் அச்சத்தை தூண்டுவதாகவும், நம்மைத் தலைகுனிய வைப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |