டெல்லியில் தனியார் விமானம் நிறுவனத்தில் 30 வயதுடைய பெண் விமான பணிப் பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இவர் மெஹ்ருலி பகுதியில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு, ஒரு ஆண் நபருடன் சென்ற 2 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அரசியல் கட்சியை சேர்ந்த அந்நபர் பகுதி தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் விமான பணிப் பெண்ணின் வீட்டுக்கு நேற்றிரவு அந்த ஆண் நபர் மது போதையில் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன் கொடுமை செய்தபிறகு மது போதையில் இருந்த அந்நபரை பாதிக்கப்பட்ட பெண் தன் வீட்டின் அறையில்வைத்து பூட்டியுள்ளார்.
அதன்பின் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நபரை கைது செய்தனர். அத்துடன் அந்த பெண் கொடுத்த புகாரின்படி பாலியல் வன் கொடுமை செய்த நபரை காவல்துறையினர் சிறைச்சாலையில் அடைத்தனர்.