பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்திய போலி பாதிரியாருக்கு 120 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரை சேர்ந்த போலி பாதிரியாரான கேத் ரானியார் நெக்சிவிம் எனும் அமைப்பை நடத்திவந்தார். இந்த அமைப்பிற்கு தொழிலதிபர்களும் பணக்காரர்களும் நிதி வழங்கி வந்தனர். இந்த அமைப்பில் சேரும் பெண்களுக்கு கேத் சரியாக உணவு கொடுக்காமல் கொடுமை படுத்தியதோடு அவர்களின் உடலில் தனது பெயரை அச்சிட்டு பாலியல் அடிமைகளாக நடத்தி வந்துள்ளார்.
இதுதொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததால் கேத் கைது செய்யப்பட்டார். கடந்த வருடம் ஜூலை மாதம் நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட இந்த வழக்கில் நேற்று முன்தினம் இறுதியாக விசாரணை முடிவடைந்து கேத் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி அவருக்கு 120 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.