Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை…. ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கான அட்டவணையை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். அதன்படி வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகளில் சேர இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கான அட்டவணையை வெளியிட்ட பிறகு பேசிய அமைச்சர், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த வருடம் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, கரூர் உள்ளிட்ட 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Categories

Tech |