மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பயணிகள் நலச்சங்கம் செயலாளர் பிரமநாயகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது இந்தியாவில் ஆண்டுதோறும் சுகந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய தெற்கு ரயில்வே ரயில் நிலையங்களில் அமிர்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி, திருப்பூர், காட்பாடி, திருவல்லிக்கேணி ஆகிய ரயில் நிலையங்களிலும் கொண்டாடப்படுகிறது.
எனவே வருகின்ற 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொரோனாவால் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி-சென்னை பகல் நேர இணைப்பு ரயிலும், தூத்துக்குடி-கோவை இரவு நேர இணைப்பு ரயிலும் மீண்டும் இயக்க வேண்டும். மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாக நெல்லை-பாலக்காடு இடையிலான பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி வரை இரவு நேரங்களில் இயக்க வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.