நான்கு வழி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை பகுதியில் 4 வழி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் சிறு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்ய கோரியும், பாலத்தின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரயில்வே துறையில் புகார் அளித்தனர். எனவே ரயில்வேதுறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சேதமடைந்த பகுதிகளால் பாலத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளனர்.