Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாறைக்குள் பதுங்கிய சிறுத்தை…. வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பாறைக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் மலை அடிவாரத்தில் கோரையார்குளம், செட்டிமேடு உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடி, காட்டுப்பன்றி, யானை போன்ற விலங்குகள் கிராமத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும் சிறுத்தை வீடுகளில் வளர்க்கும் கன்று குட்டி, ஆடு, நாய் போன்றவற்றை வேட்டையாடி செல்கிறது. இந்த சிறுத்தை மாலை நேரங்களில் மலை அடிவாரத்தில் இருக்கும் குகையில் பதுங்கி கிடக்கிறது.

இந்நிலையில் பாறைக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் அதனை தங்களது செல்போனில் படம் எடுத்துள்ளனர். வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்காக சூரிய மின் வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்திற்குள் நுழைகிறது. எனவே சூரிய மின்வேலி மற்றும் அகழி போன்றவற்றை அமைத்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |