Categories
தேசிய செய்திகள்

பார்வையை இழக்கப் போகும் பிள்ளைகள்… சாபத்தை வரமாக்கிய பெற்றோர்கள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

12 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட எடித் லீமே செபாஸ்டியன் பெல்லெடையர் தம்பதியினர் தங்களது நான்கு பிள்ளைகளில் மூன்று பேர் பார்வையை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிந்ததால் அவர்கள் பார்வை இழப்பதற்கு முன் இந்த உலகத்தை சுற்றி பார்த்து விட வேண்டும் என்பதற்காக உலகை சுற்றிக்காட்ட புறப்பட்டு விட்டனர். தங்களது மூன்றே வயதான மகள் மியாவிற்கு பார்வையில் கோளாறு இருப்பதை அறிந்த பெற்றோர் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பரிசோதனையில் ரெட்டினஸ் பிக்மென்ட்டோசா எனும் அரியவகை மரபணு கோளாறு இருப்பதும் மெல்ல மெல்ல அவர் பார்வை இழக்கும் நிலை ஏற்படலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் 7 மற்றும் 5 வயதாகும் தங்களது மற்ற இரண்டு மகன்களுக்கும் அதே பார்வை இழப்பு அறிகுறிகள் தென்படுவதை அறிந்து வேதனை அடைந்துள்ளனர்.

2019 ஆம் வருடம் அவர்களது பயம் உறுதியாகி உள்ளது. அதாவது மியாவிற்கு வந்த அதே மரபணு கோளாறு தான் இவர்களுக்கும் இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு இந்த வியாதியை குணப்படுத்தவோ பார்வை இழப்பை தள்ளிப்போடவோ எந்தவிதமான சிகிச்சையும் இல்லை. இது எந்த அளவிற்கு காலத்தை எடுத்துக் கொள்ளும் என்பது கூட தங்களுக்கு தெரியவில்லை ஒரு வேலை இவர்கள் இவர்களது வாழ்நாளில் மத்தியில் முழுமையாக பார்வையை இழக்க நேரிடலாம் என பயப்படுகிறோம் என தெரிவித்துள்ளனர். பெற்றோர் உடனடியாக நம்மூரைப் போல அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் தங்கள் பிள்ளைகளுக்கு நேர போகும் அபாயத்தை எதிர்கொள்ளும் ஆற்றலை தற்போது இருந்தே வழக்க தொடங்கியுள்ளார்கள்.

இது மட்டுமல்லாமல் பிள்ளைகளுக்கு பார்வை நினைவாற்றலை அதிகரித்து விட்டால் அவர்களது எஞ்சிய வாழ்வை அதனை கொண்டு எளிதாக கடந்து விடலாம் என மருத்துவர்கள் அளித்த அறிவுரையை ஏற்றுக் கொண்ட பெற்றோர்கள் இவர்களுக்கு பார்வையில் இழப்பதற்கு முன்பாகவே ஒட்டுமொத்த உலகத்தையும் சுற்றி பார்த்து விட வேண்டும் எனவும் இவர்களது நினைவில் நீங்காத பசுமரத்தாணி போல அழகிய காட்சிகளை பதிவு செய்து விட வேண்டும் எனவும் முடிவெடுத்து இருக்கின்றனர். அதன்படி ஒட்டுமொத்த உலகையும் சுற்றி பார்க்கும் விதமாக சுற்றுலாவை திட்டமிட்டு பெட்டி படுக்கைகளோடு ஆறு பேரும் கிளம்பி விட்டார்கள். பலவகையான மக்கள் கலாச்சாரங்கள் அனைத்தையும் என் பிள்ளைகள் பார்த்துவிட வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால் தற்போது கனடாவில் இருந்து நமீதியா, துருக்கி, மங்கோலியா, இந்தோனேசியா என உலக நாடுகளை ஒரு கை பார்த்து விட புறப்பட்டு சென்றிருக்கிறார்கள். இந்த பெற்றோர்களின் செயல் இவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ஏராளமான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.

Categories

Tech |