பூங்கா காப்பாளர் கரடிகள் உயிருடன் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சீனாவில் இருக்கும் ஷாங்காய் பகுதியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகள் சுதந்திரமாக இருப்பதை பார்க்க பாதுகாப்பான வாகனங்களில் பார்வையாளர்கள் இருந்தபடி பார்க்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பூங்காவின் காப்பாளர் ஒருவரை அங்கிருந்த கரடிகள் கடித்து தின்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக வெளியான காணொளியில் கரடிகள் கூட்டம் கூடி நின்று சாப்பிடுவதை பார்க்க முடியும் ஆனால் சீன ஊடகங்கள் மனிதனை கரடிகள் கூட்டம் கடித்து குதறும் காணொளி வெளியாகி உள்ளதாக கூறியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பூங்காவில் மூடப்பட்டன. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.