விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், அனபெல் சேதுபதி ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி, சத்யராஜ், பார்த்திபன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் சன் டிவியில் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 11-ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் அசத்தலான ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.