பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் ஆங்கில மொழியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.
நடிகர் பார்த்திபன் தனியாக தயாரித்து, இயக்கி, நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகும். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு 61வது தேசிய திரைப்பட விருது விழாவில் விருது பெற்றுள்ளது. மேலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம் , சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு, போன்ற விருதுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் இந்தோனேசியா பஹாசா என்னும் மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தோனேசியாவின் மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ்த்திரைப்படம் என்ற பெருமையும் இப்படம் பெற்றது. அதாவது இந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் ஒத்த செருப்பு திரைப்படத்தின் ரீமேக்கை நடிகர் பார்த்திபன் உருவாக்கி வருகிறார். இப்படத்தை நடிகர் அமிதாப்பச்சன் தயாரிக்கிறார்.
இந்த நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் ஹாலிவுட் ஆங்கில மொழியிலும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இதை அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பொழுது பார்த்திபன் உறுதி செய்துள்ளார்.