Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பார்த்தாலே… நாக்கில் எச்சி ஊறும் அளவுக்கு… பிரெட் ரசமலாய் ரெசிபி…!!!

பால்                            – 1/2 லிட்டர்
பிரெட்                        – 3 ஸ்லைஸ்கள்
சர்க்கரை                 – 25 கிராம்
முந்திரி                     – சிறிதளவு நறுக்கியது
பிஸ்தா                      – சிறிதளவு நறுக்கியது
கிஸ்மிஸ்                  – சிறிதளவு
பாதாம்                      – சிறிதளவு நறுக்கியது
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ             – சிறிதளவு

செய்முறை:

ஒரு வாணலியில் பாலை ஊற்றி, சிறு தீயில் வைத்து, கொதிக்க விடவும். பின்பு பால் கொதிக்கும் நிலையில், கரண்டியால் நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

பாலின் நிறம் மாறியதும், அதனுடன் சர்க்கரை, சிறிதளவு முந்திரி, பிஸ்தா, பாதாம் மற்றும் உலர் திராட்சை என அனைத்தையும் சேர்த்து கிளறவும்.

பின் நடுத்தரமான தீயில் வைத்து, பாலானது நான்கில் ஒரு பங்கு நன்கு சுண்டும் வரை கரண்டியால் கிளறி கொண்டே இருக்கவும். தொடர்ந்து ஆடையானது மேலே படிந்ததும், அவற்றைக் கரண்டியால் கிளறி, குறைந்தது 20 நிமிடங்கள் வரை வைத்தால் பால் கெட்டியாகத் துவங்கி விடும்.

அதன்பின் ஏலக்காய் பொடியைத் தூவி, ஒரு நிமிடம் அடுப்பில் வைத்துக் கிளறி, பின் அடுப்பை அணைத்து, வாணலியை இறக்கி நன்கு ஆற விடவும்.

பின் நன்கு ஆறியதும், பிரட் துண்டுகளை எடுத்து ஓரத்திலிருக்கும் பிரவுண் பகுதியை நீக்கி, வெள்ளைப் பகுதியை மட்டும், ஒரு டம்ளர் அல்லது விளிம்பு கூரான கிண்ணத்தின் உதவியால் வட்டமாக வெட்டி எடுக்கவும்.

இந்த வட்டமான வில்லைகளை மலாய் பாலில் ஒரு நிமிடம் ஊறிய பின் எடுத்து தட்டில் வைத்து, அவற்றின் மேல் மலாய் பாலை ஊற்றி, அலங்கரிக்க மீதமுள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை மற்றும் குங்குமப்பூவைத் தூவினால் பிரெட் ரசமலாய் தயார்.

Categories

Tech |