இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பிறந்த குழந்தைக்கு பெற்றோர்கள் பார்டர் என பெயரிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலம் ராம் மற்றும் நிம்பு பாய் தம்பதியினர். இவர்கள் இருவர் உட்பட மொத்தம் 98 பேர் கொரோனா பரவலால் போடப்பட்ட லாக் டவுனுக்கு முன்பாக இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதற்கு இந்தியா வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவர்களை போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி பாகிஸ்தான் அரசு அனுமதிக்க மறுத்து விட்டது.
இதனைத்தொடர்ந்து செய்வதறியாது திகைத்த அவர்கள் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி வந்துள்ளனர். அவர்களுக்கு அருகே உள்ள கிராமத்தினர் மூன்று வேளை உணவு அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் நிம்பு பாய் கர்ப்பமாக இருந்துள்ளார். அவருக்கு கடந்த 2ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தியா பாகிஸ்தான் பார்டர் பகுதியில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு பார்டர் என பெயர் சூட்டியுள்ளனர்.