Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பார்க்கும் இடங்களிலெல்லாம் இளமைக்கால மரணம்… காரணம் என்ன..? இதற்குத் தீர்வுதான் என்ன..?

பார்க்கும் பக்கமெல்லாம் இளமைகால மரணங்கள் பெருகிவருகின்றன. இந்த இளமை மரணங்கள் அந்நியர்களை கூட உலுக்கி போட வைக்கின்றது. அவர்களை நம்பி வந்த குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றது. குடும்பத் தலைவனின் இறப்புக்கு பிறகு அந்த குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப்படுகின்றன. இது விதியல்ல. இன்றைய மனிதனின் அலட்சியப் போக்கும் அவர்களின் வாழ்வில் நடக்கும் தவறுகளால்தான். இதற்கு முழுக்க முழுக்க காரணம் மனிதனின் ஆயுள்காலம்.

இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்:

  • உடற்பயிற்சி இன்மை,
  • உடல் உழைப்பின்மை,
  • இரவில் கண் விழித்திருத்தல்,
  • காலை உணவை தவிர்த்தல்,
  • ஆரோக்கியமற்ற உணவுகளின் மீது நாட்டம்,
  • பணத்தை நோக்கிய ஓட்டம்,
  • பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணுதல்,
  • கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள்

கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பைத்தொட்டி அல்ல. நேரத்துக்கு நேரம் உண்ணுங்கள், நேரத்திற்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது நம் உடல் தன்னைத்தானே சீராக்குகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடான நீர் அருந்துங்கள். தினமும் ஒரு பழதை வெறும் வயிற்றில் உண்ணுங்கள். போதிய அளவு நீர் அருந்துங்கள்.

இளநீர் என்பது மிகவும் நல்லது. பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊறவைத்த கடலை, வெள்ளரிப்பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றை தினமும் உண்ணுங்கள் காலை உணவைத் தவிர்காது ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து உண்ணுங்கள். அளவாக உண்ணுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். தொடர்ந்து உட்காருவதை குறையுங்கள். உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

சந்தோஷமாக இருங்கள்:

மூன்று வேளை உண்டால் இரண்டுவேளை அவசியம் 20 நிமிடம் நடைபயிற்சி செய்யுங்கள். இருக்கமாக இருக்காமல்,  சிரித்துப் பேசி சந்தோஷமாக இருங்கள். உங்கள் வட்டத்தை இயந்திர தோடு குறுகி கொள்ளாதீர்கள். அழுது வடியும் சீரியல்கள் பார்த்து உங்கள் இதயத்தை வாடாமல் சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள். ஆளை கொல்லும் கவலைகளை புறந்தள்ளி ஆளுமையை தரும் தன்னம்பிக்கையை நிலைநாட்டுங்கள். உங்கள் வாழ்க்கை ஒரு அற்புதப் பரிசு அவமதித்து விடாதீர்கள்.

Categories

Tech |