Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பார்க்கும்போதே நாவில் எச்சி ஊறும்..ருசிமிகுந்த மாங்காய் ஊறுகாய்..!!

கோடைகாலத்தில் பழையசாதத்திற்கு  இந்த  மாங்காய் ஊறுகாய் ரொம்ப ருசியாக இருக்கும். பார்க்கும்போதே எச்சி ஊறும் நாவில்..!

தேவையான பொருட்கள்:
பெருங்காய பொடி      – 1/2 டீஸ்பூன்
கடுகு                                   – 1, 1/2 டீஸ்பூன்
வெந்தயம்                         – 1, 1/ டீஸ்பூன்
உப்பு                                    – தேவையான அளவு
வத்தல் பொடி                 – 4 டீஸ்பூன்
மாங்காய் (பெரியது)  – 1

தாளிக்க தேவையானவை:
கறிவேப்பில்லை            – ஒரு கைப்பிடி அளவு
நல்ல எண்ணெய்           – 100 மில்லி லிட்டர்
கடுகு,உளுந்தபருப்பு   –  ½ ஸ்பூன்

செய்முறை:

முதலில் மாங்காயை நன்கு கழுவி கொள்ளுங்கள். பின் மாங்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். கடுகையும், வெந்தையத்தையும் தனித்தனியாக  வெறும் வாணலியில் வறுத்து எடுத்து கொண்டு, பின் மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவேண்டும்.

நறுக்கி வைத்திருக்கும் மாங்காய் துண்டுகளில் உப்பு போட்டு கிளறி 12 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஊறிய மாங்காய்த் துண்டுகளுடன் வத்தல் பொடி பொடி, கடுகு மற்றும் வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக ஒரு சேர கிளறி விடவேண்டும். கிளறும் பொழுது கைப்படக்கூடாது. பின் அரை மணி நேரம் ஊற விடவும்.

வாணலியில் நல்ல எண்ணெய்  ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதனுடன் நாம் சேர்த்து வைத்திருக்கும் மாங்காய் கலவையைக் கொட்டி, மிதமான தீயில் வைத்து வேக விடுங்கள். மாங்காய் வெந்து எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த ஊறுகாய் நன்கு ஆறியவுடன் பாட்டிலில் அடைத்து தண்ணீர் படாமல் உபயோகிக்கவும். மண்ஜாடியில் ஊறுகாயை வைத்து பயன்படுத்துங்கள். இரண்டு வாரத்திற்கும் மேல் கெட்டுப்போகாமல் ருசியாக இருக்கும்..

 

Categories

Tech |