ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியை கடுமையாக விமர்சனம் செய்து நடிகை கஸ்தூரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் உள்ளார்.
சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியை கடுமையாக விமர்சனம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார். இதற்கான ப்ரோமோவை பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது, “பேட்டி எடுத்தவருக்கும் கொடுத்தவருக்கும் எப்படியோ பார்க்க எனக்கு கூசிற்று. youtube சேனல்கள் எல்லாம் வெட்கி ஜகா வாங்க வேண்டும் என்று நியூஸ் சேனலில் இறங்கிட்டாங்களா? நிறுத்துங்கள் ரவீந்தர்” என பதிவிட்டு இருக்கின்றார். அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.