Categories
மாவட்ட செய்திகள்

“பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா”… இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் அறிவிப்பு…!!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சி தற்காஸ் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய வட்டார அளவிலான அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் போன்றவருக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி வரவேற்றார் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டிவிஎஸ் தொண்டு நிறுவன குழும தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஸ்வர்ண சிங் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவ ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியுள்ளார். மேலும் இதில்  உதவி மேலாளர் ராஜா ராமன் ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் அரசு மருத்துவர் ராஜகுமாரி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மருத்துவ அலுவலர்கள் ஊழியர்கள் விவசாயிகள் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் விழாவில் கிராமப்புற மகளிர் சுய உதவி குழுவுடன் மற்றும் தொழில் முனைவோர் தங்களது கைவினைப் பொருட்கள் மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் பாரம்பரிய உணவு தானியங்கள் கால்நடைகளுக்கான இயற்கை உணவுகள் பாரம்பரியமிக்க இயற்கை மருந்துகள் போன்றவற்றை பார்வைக்கு வைத்திருந்தார்கள். இதனை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டுள்ளார். அப்போது கலெக்டர் லலிதா பேசும் போது மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சீர்காழி பகுதியில் மண நலம்  பாதிக்கப்பட்டவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் கிராமப்புற மகளிர் சுய உதவி குழுக்களை மேம்படுத்தி அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது மட்டுமல்லாமல் மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. அதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

Categories

Tech |