Categories
மாநில செய்திகள்

“பாராட்டத்தக்க நடவடிக்கைகள்” ஒவ்வொரு மாதமும் 5,000 வெகுமதி…. நட்சத்திர காவலர் விருது…. கமிஷனரின் அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினருக்கு 5,000 ரூபாய் வெகுமதியுடன் நட்சத்திர காவலர் விருது வழங்கப்பட உள்ளதாக சென்னை காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். மேலும் இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவல் துறையில் ஒவ்வொரு மாதமும் பாராட்டத்தக்க வேலை பார்க்கும் காவல் துறையினரை கண்டறிந்து அவர்களின் பணியை மதிப்பீடு செய்து மாதத்தின் நட்சத்திர காவலர் என்று விருது வழங்க உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினருக்கு 5,000 ரூபாய் வெகுமதியும், தனிப்பட்ட செயல்திறன் பாராட்டு சான்றிதழும், ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி வழங்கப்படும். அதனால் காவல்துறையினர் பாராட்டும் வகையில் பணியாற்றி அதன் விபரத்தை தங்கள் துணை கமிஷனர் மூலமாக கூடுதல் போலீஸ் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும். எனவே காவல்துறையினர் விருது வாங்குவதற்கு தங்களுடைய பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |