Categories
உலக செய்திகள்

“பாராசிட்டமால் மாத்திரைகள்”…. 15 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

பாகிஸ்தானில் திடீரென உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலும் சில பகுதிகளில் பரவியுள்ளது. இந்த நிலையில் பாராசிட்டமால் மாத்திரைகள் மருந்து கடைகளில் படு வேகமாக விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாத்திரைகள் பல கடைகளிலும் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் கள்ள சந்தையிலும் இந்த மாத்திரைகள் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் பாராசிட்டமால் மருந்து தயாரிப்பதற்கான உரிமம் இருந்தும் அதனை தயாரிக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன ? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு 15 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் பாராசிட்டமால் மாத்திரைகளை தயாரித்து வரும் நிறுவனங்கள் அதன் உற்பத்தியை அதிகரிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |