பாரம்பரிய நெல் விதைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குரவப்புலத்தில் என்ஜினீயரான சிவரஞ்சனி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் சரவணகுமாருடன் இணைந்து இந்தியாவிலுள்ள 1,250 வகையான பாரம்பரிய நெல் விதைகளை சேகரித்து வைத்துள்ளார். மேலும் தங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை அந்த தம்பதியினர் சாகுபடி செய்துள்ளனர். இந்த வயலை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, தம்பதியினர் சேகரித்து வைத்துள்ள 1,250 நெல் ரகங்களை குறித்து விவரம் கேட்டறிந்துள்ளார். இதனையடுத்து சிவரஞ்சனிக்கு தமிழக அரசு உதவி செய்ய பரிந்துரை செய்யப்படும் எனவும், பாரம்பரிய நெல்லை மீட்டெடுப்பதற்கு பாராட்டுகளும் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில் வேளாண்மை இணை இயக்குனர், துணை இயக்குனர், வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.