Categories
சினிமா தமிழ் சினிமா

பாரப்பா….!! ஒரே பாட்டில் பிரபலமான பிரபல பாடகி…. ஓவர் நைட்டில் பேமஸ் ஆயிட்டாங்களே பா….!!!

நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கின்ற புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அரபிக் குத்து பாடல் நாயகி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் இயக்கத்தில் “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு அண்மையில் இப்படத்தின் “அரபிக் பாடல்” வெளியானது. இப்பாடல் ரசிகர்களிடையே மாபெரும் ஹிட்டாகியுள்ளது. வலைதளம் முழுவதும் இப்பாடலே ஒலிக்கின்றது. இப்பாடலில் நடனமாடிய ஜோனிடா காந்தி மிகவும் பிரபலமாகியுள்ளார் மற்றும் இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளார். இந்நிலையில் ஜோனிடா காந்தி குறித்து இணையத்தில் தகவல் வெளியாகி இருக்கின்றது. பீஸ்ட் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான “ஹலமித்தி ஹபிபோ” பாடல் சூப்பர் டூப் ஹிட்டாகியுள்ளது.

இப்பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி 41 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்பாடலில் ஜோனிடா காந்தி மிகவும் சூப்பராக நடனமாடியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை பூஜா ஹெக்டேக்கு பதிலாக நீங்களே நடித்திருக்கலாம் என கூறிவருகின்றனர். மேலும் நீங்கள் ஹீரோயினாக நடிக்க ட்ரை பண்ணலாம் என ரசிகர்கள் கமெண்ட் பாஸ்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜோனிடா காந்தி, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிக்கின்ற வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |