Categories
சினிமா தமிழ் சினிமா

பாரப்பா…. இசையமைப்பாளராக உருவெடுக்கிறார் மிஸ்கின்…. ஆர்வத்தில் ரசிகர்கள்….!!!

இசையமைப்பாளராக உருவெடுக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.

தமிழ் சினிமா உலகில் தனித்துவமாக இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குனர் மிஸ்கின். இவர் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கினார். பெரும்பாலும் காமெடி படங்களில் நடித்த பாண்டியராஜனை,  என்னை அஞ்சாதே திரைப்படத்தின் வாயிலாக வில்லனாக நடிக்க வைத்தார். மென்மையான நடிகரான சேரனை ஆக்ஷன் நாயகனாக மாறினார். இவர் எல்லா படங்களிலும் தனித்துவமான விஷயங்களை மேற்கொள்கிறார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சைக்கோ திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவர் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் விஷாலுக்கும், மிஸ்கினுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால் இப்படம் கைவிடப்பட்டது. தற்போது துப்பரிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி நடித்து வருகிறார். தற்போது மிஷ்கினும் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர், நடிகர் என்று இருந்த மிஷ்கின் தற்போது இசையமைப்பாளராகிறார். இவரின் தம்பி இயக்குக்கின்ற படத்தில் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

Categories

Tech |