பன்னாட்டு பாரதி திருவிழாவில் பாரதியாரின் பெருமைகளைப் பற்றி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பாரதியார் பிறந்தநாள் விழா பன்னாட்டு பாரதி திருவிழா எனும் பெயரில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவினை கடந்த 16ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர ஆரம்பித்து வைத்தார். நேற்று மாலை விழா நிறைவு பகுதிக்கு வந்தது. இதில் பி எஸ் ராகவன் வரவேற்றார். காணொலிக் காட்சி மூலமாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றி அடைந்த நபர்களுக்கு எழுத்தாளர் சிவசங்கரி பரிசு வழங்கிப் பாராட்டினார்.
விழாவில் வானவில் பண்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினர் ஷோபனா ரமேஷ் நன்றி தெரிவித்தார். ரத்னா சிவராமன், விஜய் கிருஷ்ணா ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் கே ரவி, பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், நட்ராஜ் எம்எல்ஏ போன்றோர் கலந்து கொண்டனர்.
நிர்மலா சீதாராமன் விழா விழாவில் கூறியது,பிரதமர் நரேந்திர மோடி அனைத்து சபைகளிலும் பாரதியாரின் பெருமைகளைப் பற்றி கூறி பாடி வருகிறார். தன்னுடைய நிலையை பற்றியும் பாரதியார் எப்போதும் கூறியதில்லை. நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி சுதந்திரம் அடைவதற்கு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தினார். நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது என்று மக்களுக்கு எடுத்து சொல்வதையே தனது கடமையாகக் கொண்டிருந்தார்.
சோர்வு, தளர்ச்சி, நம்பிக்கை இழப்பு, செயலிழப்பு தன்மை இல்லை, ஆகிய உணர்ச்சிகள் அவருடைய பாடல்களில் காணப்படவில்லை. வீரம், தன்னம்பிக்கை, நம்பிக்கை, போன்ற உணர்ச்சிகளை உடைய பாடல்களை அவர் பாடியிருக்கிறார். பாரதியாரின் பாடல்களை கேட்டாலே அனைவருக்கும் வீரம் வந்துவிடும். தமிழ் பற்று, தமிழ் புலமை, ஆகியவை இருந்தாலும் பாரத அன்னையின் தவப்புதல்வன் ஆகவே உணர்ந்தார். தமிழ் மக்களை புகழ்ந்து பாடி இருந்தாலும், பாரத நாட்டை பாடல்களில் இணைத்தவர். ஒவ்வொரு எண்ணத்திலும் ரசித்து பாரதத் தாயை பற்றி பாடியுள்ளார்.
பாரதியாருக்கு மட்டுமே இளமையிலும் வீரத்தை பாடல்களின் மூலமாக கொண்டுவரும் சக்தி உள்ளது. அவரது சில பாடல்களின் மூலமாக கோபத்தை வெல்வது எவ்வளவு முக்கியம்? என்பது குறித்து விளக்கியுள்ளார். தேசபக்தி, கவிதை, நாட்டுப்பற்று போன்றவற்றை பற்றிப் பேசும்போது பாரதியாரே குறிப்பிட்டு சொல்கிறோம். அவரைப் பற்றி நாம் எவ்வளவுதான் கற்றாலும், புதிது புதிதாக நாம் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம். என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.