Categories
தேசிய செய்திகள்

பாம்பு பிடிக்க சென்ற முதியவர்…. ஏற்பட்ட விபரீதம்…. கர்நாடகாவில் சோகம்….!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கோடிஹாலா கிராமத்தில் பசவராஜ் புகாரி என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளார். இந்நிலையில் கிராமத்தில் ஒரு வீட்டில் ஐந்தரை அடி நீளமுள்ள  நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது என்று அந்த முதியவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் மதுபோதையில் இருந்திருக்கிறார். இருப்பினும் ஆபத்து என்று அழைத்த உடனே சென்று வழக்கம் போல் பாம்பை பிடித்துள்ளார்.

ஆனால் அந்த பாம்பை பைக்குள் போட்டு விட்டு உடனே வனப்பகுதிக்குள் கொண்டுவிடாமல் கையில் பிடித்தபடி  சென்றுள்ளார். அப்போது கைப்பிடியில் இருந்த நல்ல பாம்பு விலக போராடிய போது 5 முறை அவரை கடித்திருக்கிறது. இதனால் அந்த முதியவர் தலை சுற்றி விழுந்து உயிரிழந்திருக்கிறார். அவர் உயிரிழந்த போதும் கூட அந்த பாம்பை விடாமல் இருக்கமாக பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |