திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொட்டனம்பட்டி பகுதியில் பிரேம் குமார்- ஜெயசித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 11 வயதில் ஒரு மகளும், 8 வயதில் பொன்குமரன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், சிறுவன் பொன்குமரன் பிறக்கும் போதே தோல் நோய் பாதிப்புடன் பிறந்துள்ளார். இதில் சிறுவனுக்கு தலை முதல் கால் வரை பாம்பு தோல் போல் தோலானது உரிந்துகொண்டே இருக்குமாம்.
அதுமட்டுமல்லாமல் உடல்சத்துக் குறைபாடு இருப்பதால் 8 வயதானாலும் சிறுவன் பார்ப்பதற்கு மூன்று வயதுக்குரிய உடல் வளர்ச்சியுடன் இருக்கிறான். இதன் காரணமாக தனியாக வெளியில் நடமாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே சிறுவன் முடங்கிள்ளான். இதனிடையில் சிறுவனின் உடல்நிலை சரியாக தம்பதியினர் பல மருத்துவமனையை நாடியுள்ளனர். எனினும் எதுவும் பயனளிக்கவில்லை. மேலும் ஆயுர்வேதம் சித்த மருத்துவமும் கட்டுப்படவில்லை என தம்பதியினர் வேதனையை தெரித்துள்ளனர்.
இது குறித்து பிரேம் குமார் கூறியபோது, மனைவி கர்ப்பமாக இருந்த நேரத்தில் தனது வீட்டுக்கு முன்பு இரு பாம்புகள் நடனமாடியது. அப்போது பாம்பை பக்கத்து வீட்டு பெண் அடித்ததால் அது காயம்பட்டு தந்து வீட்டு வாசலில் வந்து இறந்துவிட்டது. ஆகவே பாம்புவின் ஆன்மா கொடுத்த சாபத்தால் தனது மகன் பொன்குமரனுக்கு இவ்வாறு நேர்ந்து விட்டதாக கூறியுள்ளார். பல கோவில்களுக்குச் சென்று வைத்திய முறைகளைப் பின்பற்றியும், லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தும் சிறுவன் இன்னும் குணமடையவில்லை என்று தம்பதியினர் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகவே பொன்குமரனுக்கு சிறந்த மருத்துவம் அளிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.