சென்னை அருகே புதிய எருமை வெட்டி பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூலையில் கூலித்தொழில் செய்து வரும் பெண்ணின் தம்பி மற்றும் அவரது மனைவி உயிரிழந்ததால் அவர்களது மகளை வளர்த்து படிக்க வைத்து வந்தார் முதியவர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமியை பாம்பு கடித்துள்ளது. சிறுமியின் அழகர் சத்தத்தை கேட்டு உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
சிறுமி இறந்த இரண்டு நாட்கள் ஆன நிலையில் சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியானது. அதன் பிறகு இந்த வீடியோ குறித்து சிறுமியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், புதிய எருமை வெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்கிற சின்னதுரை, பாஸ்கர், சதீஷ்,ரமேஷ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகிய ஐந்து பேரும் வீடியோவை மறைவாக நின்று எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் பாலு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர் பாலு மற்றும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஐந்து பேர் உட்பட ஆறு பேரு மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.