பாம்பு கடித்து இறந்த 13 வயது சிறுமியை மூன்று மாதங்களுக்கு முன் 78 வயதுடைய முதியவர் பலாத்காரம் செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருவள்ளூரில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 78 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். சிறுமி பாம்புக்கடியால் இறந்த பிறகுதான், பாலியல் வன்கொடுமை பற்றிய தகவல் தெரிய வந்தது, குற்றவாளி கைது செய்யப்பட்டார். அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்த சிறுமியின் தந்தையும், தாயும் முன்பே இறந்துவிட்டனர். சிறுமி செங்கல் சூளையில் வேலை செய்யும் தனது மாமாவுடன் வசித்து வந்தாள். 78 வயதான முதயவரால் சிறுமி மூன்று மாதங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதை ரகசியமாக வீடியோ எடுத்தார்.
பாம்பு கடித்து சிறுமி இறந்த போது அந்த வீடியோவை அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார். சிறுமியின் மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்த சித்திரவதை வீடியோ வாட்ஸ்அப் குரூப்களில் பரவியதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளியை கைது செய்தனர். வீடியோவை பகிர்ந்ததற்காக இளைஞர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் மரணத்திற்கு பாம்பு கடித்ததே காரணம் என போலீசார் உறுதி செய்துள்ளனர்.