உத்தரபிரதேசம் மாநிலம் கோவிந்த் மிசாரா(22) என்ற நபர், தனது சகோதரர் அரவிந்த்(38) இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பவானிபூர் கிராமத்திற்கு சென்றார். இதில் கோவிந்த் மிசாராவின் அண்ணன் அரவிந்த் மிஸ்ரா கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாம்பு கடித்ததில் பலியானார். இந்த நிலையில் சென்ற புதன்கிழமை அன்று இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு தன்னுடைய வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் போது கோவிந்த் மிசாராவையும் பாம்பு கடித்தது. இதனால் அவர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அத்துடன் அவருடன் வீட்டில் தங்கியிருந்த அவருடைய உறவுக்காரர் சந்திரசேகர் என்பவரையும் பாம்பு கடித்துவிட்டு சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சந்திரசேகர் உயிர் தப்பினார். இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் மருத்துவ மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் உள்ளூர் எம்எல்ஏ கைலாஷ் சுக்லாவும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.