Categories
அரசியல் மாநில செய்திகள்

பாமக சொன்னது சரியே…. அப்படி, இப்படினு…. மாறி மாறி பேசும் எடப்பாடி….!!

பிரதமர் மோடிக்கு எதிராக கடந்த காலத்தில் நடந்த போராட்டம் போல தற்போதும் போராட்டம் நடக்குமா ?என்ற கேள்விக்கு பதிலளித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,

நான் ஒரு தனி கட்சியில் இருக்கும் போது என்னுடைய கருத்தை சொன்னேன். பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டினோம். இப்போது நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணி தான் இதை பற்றி முடிவு எடுக்க வேண்டும்.  2022ல் நிச்சயமாக மதிமுக ஊக்கத்துடன் இருக்கும், முன்பை விட இன்னும் வலுவாக கட்டமைக்கப்படும்.

மேலவை அமைக்க வேண்டும் என்பது தான் மதிமுகவின் கருத்தும். ஆனால் மேலவை அமைப்பதற்கான சூழ்நிலை அமைக்கப்படவில்லை. மேலவை அமைக்கவேண்டும் என்பது தான் மறுமலர்ச்சி திமுகவின் கருத்து. 2026இல் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று அவருடைய கட்சி அவருடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார், அதில் எதுவும் தவறில்யே. அவர்கள் கட்சியினுடைய கருத்தை சொல்லி இருக்கிறார்..

ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தான் நினைப்பார்கள் அதனால் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்கிறார்கள், அதில் ஒன்றும் தவறில்லையே. திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என எடப்பாடி விமர்சனம் செய்தது குறித்து பேசிய வைகோ,  எடப்பாடி அப்படி இப்படி மாறி மாறி பேசுவாரு என தெரிவித்தார்.

Categories

Tech |