பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு நேற்று 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தாலும் அந்தந்த மாநிலங்களில் மாநில அரசுகள் தடை விதித்தால்தான் உத்தரவு செல்லுபடி ஆகும். இதனால் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு தலைமைச் செயலாளர் இறையன்பு பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 வருடங்கள் தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின்படி கேம்பஸ் பிராண்ட் ஆப் இந்தியா (பிஎம்ஐ), அனைத்திந்திய இஸ்லாமிய கவுன்சில் (ஏஐஐசி), எம்பவர் இந்தியா பவுண்டேஷன், ஜூனியர் பிரண்ட், தேசிய பெண்கள் முன்னணி, தேசிய மனித உரிமைகளுக்கான கூட்டமைப்பு (NCHRO), ரிகாப் இந்தியா பவுண்டேஷன் (RIF) போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.