பத்ராவதி அருகே சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுக்கா அருகே உள்ள ஒரு கிராமத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த வினய் என்ற 20 வயது வாலிபர் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அந்த வாலிபர் சிறுமியை அழைத்து சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி பாக்கு தோட்டத்திலுள்ள ஒரு குடோனுக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் நடந்த விஷயத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுமி அவருடைய பெற்றோர் வீட்டிற்கு வந்தவுடன் தனக்கு நடந்த விஷயத்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் வினய் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த வாலிபர் ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவித்து சில வருடங்களுக்கு முன்பு தான் வெளியே வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.