Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாப்பா..! இந்த அட்ரஸ் எங்க இருக்கு….? காரில் வந்த மர்ம நபர்…. அதிர்ச்சியில் சிறுமி…. போலீஸ் விசாரணை…!!

சிறுமியை கடத்தி செல்ல முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் 8 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் 4-ஆம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி டியூஷனுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது வெள்ளை நிற காரில் இருந்து இறங்கிய நபர் முகவரி கேட்பது போல திடீரென சிறுமியை காரில் கடத்தி சென்றுள்ளார்.

இதனையடுத்து உறவினர் ஒருவரைப் பார்த்ததும் சிறுமி அலறி சத்தம் போட்டதால் அச்சத்தில் அந்த நபர் சிறுமியை கீழே இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். அதன்பின் வீட்டிற்கு வந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |