Categories
தேசிய செய்திகள்

பாபு…. வெளிய வா பாபு… “மண்டபதற்குள் மணமகனாக காதலன், வெளியில் கதறிய காதலி”… நெஞ்சை உருக வைக்கும் வீடியோ…!!

தனது காதலனுக்கு வேறு ஒரு திருமணம் நடைபெற இருந்ததால் திருமண மண்டபத்தின் வாசலில் இன்று அந்தப் பெண் கதறிய வீடியோ மிகவும் வைரலானது.

காதல் என்பது ஒரு புனிதமான பந்தம். அது எல்லோருக்கும் சிறப்பாக அமைந்து விடாது. அப்படி காதலித்து திருமணம் வரை சென்றாலும் பெற்றோர்கள் ஜாதி, மதம், பணம், அந்தஸ்து, என பல காரணங்கள் கூறி அவர்களை பிரிக்கின்றனர். இப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சேர்ந்த சோனம் பாபு என்பவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் மூன்று ஆண்டுகள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பிறகு பாபுவின் வீட்டில் அவருக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர்.

இதற்கு பாபுவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப் பெண்ணை விட்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய அவர் முடிவு செய்தார். இந்த விவகாரம் அந்தப் பெண்ணிற்கு தெரியவரவே திருமணம் நடக்கும் நாளன்று மண்டபத்திற்கு வெளியே சென்று கதறியுள்ளார். பாபு பாபு என்று தொண்டை கிழிய கத்தி தனது காதலனை ஒருமுறை வெளியில் வந்து தன்னிடம் பேசும்படி அழைத்துள்ளார். ஆனால் அவர் மண்டபத்தின் கேட்டை பூட்டிவிட்டு உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று கூறி சில நபர்களை அங்கு நிற்க வைத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து அந்த பெண்ணை அழைத்துச் சென்றனர். இறுதிவரை தன் காதலன் பாபுவை காணாமலேயே அந்த பெண் அழுது கொண்டே சென்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Categories

Tech |