பெரும்பாலான வங்கிகள் பான் கார்டுகளில் 50,000 வரை கடன் வாங்குகின்றனர். ஆனால் இது பலருக்கும் தெரிவது கிடையாது. பான் கார்டுக்கு கடன் கொடுப்பதற்கு முன், வங்கி அல்லது NBFC வாடிக்கையாளர்களின் CIBIL ஸ்கோரை சரிபார்க்கும். இதிலிருந்து வாடிக்கையாளர்களின் கடனை திருப்பி செலுத்துவதில் உள்ள நிறைகுறைகளை தெரிந்துகொள்ள முடியும்.
பான் கார்டு மூலம் 50 ஆயிரம் வரை தனி நபர் கடனை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். 50,000 வரை எந்த பத்திரமும் இல்லாமல் வங்கிகள் கடன் தருகிறது. நீங்கள் எதையும் அடமானம் வைக்க வேண்டிய தேவை இல்லை. உங்களுடைய சிபில் மதிப்பெண் நன்றாக இருந்தால் மட்டும் போதும் இந்த கடனை பெற முடியும். நீங்கள் வேலை அல்லது வணிகம் செய்து கொண்டிருந்தால் மட்டுமே பேன் கார்டில் தனி நபர் கடனை பெற முடியும். எனவே இதை பயன்படுத்தி நீங்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம்.