Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு,ஆதார் எண் இணைப்பு… திடீரென முடங்கிய இணையதளம்… அதிர்ச்சி…!!!

இந்தியாவில் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இணையதளம் முடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேன் கார்டு ஆதாருடன் இணைக்காதவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இறுதி கெடு கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக இதற்கான கால வரம்பு  மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காத மக்கள் உடனே விரைந்து சென்று இணைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட நேரிடும்.

இந்நிலையில் இணையத்தின் பயன்பாடு மற்றும் ஆதார் எண் நினைப்பில் ஈடுபட்டு வருவதால் இணையத்தளம் முடங்கியுள்ளது. மேலும் என்று இரண்டையும் நினைக்காவிட்டாலும் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் பெரும்பாலானோர் இணையதளத்தை பயன்படுத்தி வருவதால் இணையதள முடங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்புக்கு www1.incometaxindiaefilling. gov.in என்ற இணையதளத்தில் இணைக்கலாம்.

Categories

Tech |