Categories
தேசிய செய்திகள்

பானிபூரியில் தண்ணீருக்கு பதில்… சிறுநீரை கலந்த வியாபாரி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தள்ளுவண்டியில் பானி பூரி வைத்து வியாபாரம் நடத்தி வருபவர் பானி பூரி தயாரிப்பதற்குப் சிறுநீரை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் அதான் என்ற இடத்தில் வியாபாரி ஒருவர் தள்ளுவண்டியில் பானி பூரியை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் பானி பூரி, சாட், வட பாவ், பாவ் பாஜி உள்ளிட்டவை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது அடுப்பில் பானி பூரிக்கான மசாலா தயாராகிக்கொண்டு இருந்தது. அதில் தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக அவர் பாத்திரத்தில் சிறுநீரை பிடித்து அதை ஊற்றி சமைத்தார். பின்னர் அந்த பாத்திரத்தை கழுவாமலேயே உணவுப் பொருட்களை அதில் போட்டு பரிமாறினார். இதனை யாரோ ஒருவர் மறைந்திருந்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

20 வினாடி ஓடும் அந்த வீடியோ மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி அந்த வியாபாரியை கைது செய்துள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள சேட்டன் காஞ்சியில் பானிபூரியில் சிறுநீர் கலந்த காரணத்திற்காக வியாபாரிக்கு 6 மாதம் ஜெயில் வழங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு மும்பை கொல்காபூரில் பானிபூரியில் கழிவறை தண்ணீரை கடைக்காரர் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |