பிரேசில் நாட்டில் பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனிரோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள குடிசை பகுதியில் கனரக வாகனங்களில் செல்லும் பொருட்கள் திருட்டு போன்ற குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததுள்ளது. இதனை அடுத்து 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு வாகனங்களில் விரைந்து சென்று குடிசைக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென அவர்கள் குருவியை சுடுவது போல கண்ணில் பட்ட இளைஞர்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.