Categories
மாநில செய்திகள்

பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து பள்ளிகளை திறக்கலாம்…. WHO அறிவிப்பு…..!!!

தமிழகத்திலும் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி நிறைவடைகிறது. அதனால், தமிழகத்தில்  20 ஆம் தேதி அல்லது 22 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் 10, 11, 12 ஆம் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று WHO அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளியில் கூட்டம் அதிகமாக இருந்தால் சமூக பரவல் ஏற்படும் என்பதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என கூறியுள்ளது.

Categories

Tech |