தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் முதலில் ஞாபகம் வரும். பாதுகாப்பாக எப்படி பட்டாசு வெடிப்பது என்பது குறித்து காவல்துறை அதிகாரிகளும், தீயணைப்பு படை அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? என்பதை பார்ப்போம்.
- தண்ணீர் வாளி மற்றும் மணலை அருகில் வைத்துக் கொள்வது அவசியம்.
- குடிசைப் பகுதிகள் இருக்கும் இடத்தில் லட்சுமி வெடி, டைம்பாம், ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிக்க கூடாது. மேலும் சிறுவர்கள் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும்.
- பட்டாசுகளை வெடிக்கும் போது எளிய கதர் அல்லது காட்டன் ஆடைகளை அணிய வேண்டும்.
- மத்தாப்புகளை கொளுத்தி முடித்த பிறகு பக்கெட் தண்ணீரிலோ அல்லது கால்வாயிலோ அதனை போட வேண்டும்.
- நீண்ட ஊதுவத்தி பயன்படுத்தி பட்டாசுகளை வெடிப்பது மிகவும் நல்லது. வெடிக்காத பட்டாசுகளை கட்டாயம் கையில் எடுக்கக் கூடாது.
- சிறுவர்கள் திறந்த வெளிகளில் பெரியவர்களின் கண்காணிப்போடு தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
- நாட்டு வெடிகளை பயன்படுத்த கூடாது.
- குழந்தைகள் தனியாக மொட்டை மாடிகளில் அல்லது குடிசை பகுதி இருக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்க கூடாது.
- வெடிகளையும், வெடிக்காத பட்டாசுகளையும் ஒன்றாக சேர்த்து வைத்து வெடிக்க கூடாது.
- பட்டாசுகளை கொளுத்தி தெருவிலோ அல்லது மற்றவர்கள் மீதோ வீசி விளையாடுவதால் அசம்பாவிதம் ஏற்படும். எனவே அதையும் தவிர்க்க வேண்டும்.
- மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டி மூலமாக பட்டாசுகளை கொளுத்த கூடாது.
- ஈரமான சாக்குகளை வெடிக்காத பட்டாசுகள் மீது போட்டு அதனை செயலிழக்க செய்வது மிகவும் அவசியம்.
- மிகவும் முக்கியமாக கேஸ் கிடங்குகள், பட்டாசு கடைகள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள், வைக்கோல் போர், பெட்ரோல் பங்க், மின்சாரம் டிரான்ஸ்பார்மர், மருத்துவமனை, மார்க்கெட் போன்ற முக்கிய பகுதிகளில் வைத்து பட்டாசு வெடிக்க கூடாது.
பாதுகாப்பான முறையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பட்டாசுகளை வெடித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும்.