தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், திமுகவும் ஒருவருக்கொருவர் விமர்சனம் கூறி மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதையடுத்து இன்று தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் ஆகும். இது குறித்து பேசிய கமல் போராடிப் பெற்ற உலகளாவிய உரிமையான 8 மணி நேர வேலை என்பது இந்தியாவில் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது என்றும், உழைக்கும் இடத்தில் பாதுகாப்பு தொடங்கி, வேலைக்கு உத்தரவாதம் வரைக்கும் மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. இந்த நிலை மீண்டும் தொடர கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.