பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டைனுக்கு சொந்தமான 2 தீவுகளை விற்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமாக கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்க நாட்டில் தொழிலதிபரான ஜெஃப்ரி எப்ஸ்டைன் என்பவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதனால் சிறைக்கு சென்றார். இவருக்கு சொந்தமான 2 தீவுகளை விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அந்த தொகையை கொடுக்க வேண்டும் என்று நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கரீபியன் தீவுகளுக்கான விலை 125 மில்லியன் டாலர் என கூறுகின்றனர். இந்த தீவில் சிறிய கட்டிடங்கள், கிறிஸ்துமஸ் குடில், கடற்கரை பகுதி போன்றவை உள்ளன. எனவே இந்த தீவுகளை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிமன்றம் ஆணையிட்டது. மேலும் டொனால்ட் ட்ரம்ப், பில் கிளின்டன், இளவரசர் ஆண்ட்ரூ போன்ற மிகப் பெரிய மனிதர்களுடன் இவர் தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெஃப்ரி எப்ஸ்டைன் சிறு குழந்தைகள் உள்பட 36 பெண்களை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியதால் இவர் மேல் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெற்றார். இதனை அடுத்து இவர் 2019ஆம் ஆண்டு சிறையில் உயிரிழந்தார்.