Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாண்டியாவை நீக்கிட்டு இவர ஏன் சேர்த்தீங்க…… தீபக் ஹூடா தான் சரியான ஆளு….. விளாசும் முன்னாள் இந்திய வீரர்..!!

ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தது தவறான முடிவு என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர்-4 சுற்றுக்குள் நுழைந்தது.

இப்போட்டி இந்திய ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும். இதில் அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 6 சிக்சர் 6 பவுண்டர்கள் என  26 பந்துகளில் 68 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல இவருக்கு உறுதுணையாக விராட் கோலியும் சிறப்பாக ஆடினார். சமீப காலமாக பார்ம் இல்லாமல் தவித்த கிங் கோலி இந்த ஆட்டத்தில் அற்புதமாக ஆடினார். கோலி  44 பந்துகளில் 59 ரன்கள் (3 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்தார்.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பெற்றார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு, ரிஷப் பண்ட் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் ரிசப் பண்ட் பேட்டிங் செய்ய வரவில்லை.. ஏனென்றால் விராட் கோலியும் சூர்ய குமார்  யாதவும் கடைசி வரை நின்றனர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட்டை தேர்வு செய்தது தவறான முடிவு என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் சாடி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட்டை அணியில் சேர்த்ததை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.. ஏன் என கேட்டால் ஏற்கனவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தினேஷ் கார்த்திக் அணியில் உள்ளார். தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிவிட்டு ரிஷப் பண்டை கொண்டு வரலாம்.. ஹர்திக் பதிலாக ஹூடாவை சேர்க்கலாம். இந்த 2 தவறையும் செய்து விட்டனர்.

அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டர், அவருக்கு பதிலாக ஒரு வீரரை நீங்கள் தேர்வு செய்தால் அவர் பந்து வீசும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.. அதன்படி பார்த்தால் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக அணியில் தீபக் ஹூடா தான் சரியான மாற்று வீரராக இருக்க முடியும்.. ஏனென்றால் தீபக் ஹூடாவால் பகுதி நேரத்தில் பந்தும் வீச முடியும்.. எனவே நேற்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்டை அணிக்குள் சேர்த்தது தவறு.. தீபக் ஹூடா தான் தகுதியான வீரர் என்று விளாசி இருக்கிறார்..

Categories

Tech |