Categories
சினிமா தமிழ் சினிமா

“பாண்டியன் ஸ்டோர் முல்லை வெளியிட்ட அறிவிப்பு”…. சோகத்தில் ரசிகாஸ்…!!!!!

பாண்டியன் ஸ்டோர் தொடரில் இருந்து விலகுவதாக காவ்யா அறிவுமணி அறிவித்திருக்கின்றார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடர் பலராலும் கலாய்க்கப்பட்டாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகின்றது. குடும்பத்தின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகின்றது. முன்னதாக இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து அவரின் கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி மாற்றப்பட்டார்.

இதில் அவரின் நடிப்பு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் வருவதால் தொடரில் இருந்து விலகுவதாக சென்ற சில வாரங்களாகவே செய்தி கசிந்து வந்தது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக காவியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி நாள் ஷூட்டிங். முல்லையாக கடைசி நாள் 14.09.2022. இந்த அழகான பயணத்திற்கு நன்றி என பதிவிட்டு இருக்கின்றார். இது தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |