Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாட்டு பாடி கலாட்டா…. படிக்கட்டில் தொங்கிய படி வந்த மாணவர்கள் கைது…. போலீஸ் அறிவுரை….!!!

படிக்கட்டில் தொங்கியபடி ரயிலில் கலாட்டா செய்த இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் மின்சார புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பாட்டு பாடிய ரகளை செய்து பயணிகளை அச்சுறுத்தி வந்துள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தினந்தோறும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று காலை சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற மின்சார புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்களான சயன்சா, சார்த்தி இரண்டு பேரும் படிக்கட்டில் தொங்கியபடி பாட்டு பாடி கலாட்டா செய்தனர். இதனால் போலீசார் இரண்டு மாணவர்களையும் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மாணவர்களிடம் இனிமேல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |