பிரான்சில் 8 வயது சிறுமி நான்கு பேரால் கடத்தப்பட்டு அவரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் இருக்கும் Vosges என்ற பகுதியில் மியா என்ற 8 வயது தன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளாக நடித்து சிறுமியை அழைத்துச்சென்றுள்ளனர். அதன் பிறகு மற்றொருவர் வாகனத்தில் தயாராக இருந்துள்ளார். அவர்கள் சிறுமியை கடத்திச் சென்று சுமார் இருபது நிமிடங்களில் சிறுமியின் தாயிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
அதாவது சிறுமி அவரது தாயிடம் பிரிக்கப்பட்டு சட்டபடி பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அந்த சமயத்தில் தான் சிறுமியின் தாய் அவரை எங்கோ கூட்டிசென்றுவிட்டார். இந்நிலையில் மியாவை கடத்திய கடத்தல்காரர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இணையதளம் மூலமாக ஒருவர் எங்களை தொடர்பு கொண்டார். அவரின் கூறிய திட்டப்படி சிறுமியை கடத்தியதாக கூறியுள்ளார்கள். இதனிடையே கடத்தலில் தொடர்புடையதாக கருதப்படும் ஒரு நபரின் வீட்டில் காவல்துறையினரின் மேற்கொண்ட சோதனையில், வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனால் கடத்தல்காரர்களான, அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களிடம் தீவிரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் அவர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் மையங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது தெரியவந்திருக்கிறது.
இதனிடையே மியா மற்றும் அவரின் தாய் லோலா(28) இருவரையும் தற்போதுவரை கண்டறிய முடியவில்லை. மேலும் Vosges பகுதியானது, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் அமைந்திருக்கிறது. எனவே அந்த குழந்தை வேறு எந்த நாட்டிற்காவது கடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் வெளிநாட்டு அதிகாரிகளிடம் உதவி நாடியுள்ளனர்.