Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாட்டியை பார்க்க சென்ற வாலிபர்…. வழியிலேயே நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் கோவில் சக்தி நகரில் கோபி சங்கர்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புன்னம் சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோபி சங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |