மதுரவாயல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பாட்டியுடன் தனிமையில் இருந்தபோது இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. இந்நிலையில் மதுரவாயலை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாட்டியுடன் வீட்டில் இருந்த சிறுமியிடம் சுரேஷ் என்பவர் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த சிறுமியும் பாட்டியும் சத்தம் போட்டதில் அவர் தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுரேஷ் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.