Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பாட்டியின் செயினை சட்டுனு பறித்துக்கொண்டு…. ஸ்டைலாக ஓடிய திருடன்…. கடைசியில தான் டுவிஸ்ட்டே இருக்கு….!!!

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் EL டைப் வீட்டில் வசிப்பவர் பிச்சைமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர் இதே பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 11.45 மணியளவில், வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் தனியாக நடந்து செல்கின்றார். அவரை தொடர்ந்து ஹெல்மெட் அணிந்த இளைஞர் இரு சக்கர வாகனத்தில் அந்த மூதாட்டியை கடந்து செல்கின்றார்.

முன்னால் நடந்து சென்ற அந்த இளைஞர் திரும்பி நடந்து வந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு வேகமாக ஓடி, ஏற்கனவே தயாராக இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த இளைஞரின் பின்னால் ஸ்டைல்லாக குதித்து அமர்ந்து மின்னல் வேகத்தில் பறந்து சென்று விட்டனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பயந்து போய் மூதாட்டியை விசாரித்த போது அது கவரிங் செயின் என கூறியதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோன்றிமலை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |